ADDED : செப் 13, 2025 09:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி : நெய்வேலியில் பா.ம.க., தலைவர் அன்புமணி நடைபயணம் மேற்கொண்டார்.
நெய்வேலி இந்திரா நகர், எம்.ஆர்.கே., சாலை முதல், என்.எல்.சி., ஆர்ச் கேட் வரை பா.ம.க., தலைவர் அன்புமணி தமிழக மக்கள் உரிமை மீட்பு நடைபயணம் மேற் கொண்டார்.
பின், அங்கு நடந்த பொதுக் கூட்டத்திற்கு வடக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். பா.ம.க., தலைவர் அன்புமணி பேசினார்.
கூட்டத்தில், மாவட்டத் தலைவர் கவுரிசங்கர், மாநில சொத்து பாதுகாப்பு குழு தலைவர் கோவிந்தசாமி, தலைமை நிலைய செயலாளர் செல்வகுமார், வன்னியர் சங்க செயலாளர் வைத்தி, தேர்தல் பணிக்குழு செயலாளர் தாமரைக்கண்ணன், துணைத் தலைவர் முருகவேல், அமைப்பு செயலாளர் தர்மலிங்கம், பொதுக்குழு உறுப்பினர் வைத்திலிங்கம், இளைஞர் சங்க செயலாளர் ஆறுமுகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.