/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அன்புமணி பிறந்த நாள்: கடலுாரில் கொண்டாட்டம்
/
அன்புமணி பிறந்த நாள்: கடலுாரில் கொண்டாட்டம்
ADDED : அக் 10, 2024 04:04 AM

கடலுார்: கடலுார் கிழக்கு மாவட்ட பா.ம.க., சார்பில், கட்சி தலைவர் அன்புமணி பிறந்த நாளையொட்டி, கடலுாரில் மருத்துவ முகாம் மற்றும் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.
கடலுார் அடுத்த நாணமேடு, மனக்குப்பம் பகுதிகளில் நடந்த விழாவிற்கு, மாவட்ட செயலாளரும், மாவட்ட கவுன்சிலருமான முத்துகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
மாநில சொத்து பாதுகாப்பு குழு தலைவர் டாக்டர் கோவிந்தசாமி, சமூக முன்னேற்ற சங்க தலைவர் சிவப்பிரகாசம், மாவட்ட தலைவர் தஷ்ணாமூர்த்தி, முன்னாள் மாநில துணை பொதுச் செயலாளர் தர்மலிங்கம் சிறப்புரையாற்றினர்.
இதில், பொதுமக்களுக்கு சிகிச்சை மற்றும் மருத்துவ ஆலோசனை, மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது. பின், மரக்கன்று நட்டனர்.
அப்போது, சமூக நீதிப் பேரவை தமிழரசன், மாநில செயற்குழு உறுப்பினர் வெங்கடேசன், பசுமை தாயகம் மாவட்ட தலைவர் சரவணன், முன்னாள் மாணவர் அணி செயலாளர் விஜயகுமார், நிர்வாகிகள் சந்திரசேகர், சகாதேவன், வெங்கடேசன், ராஜசேகர், ரத்தினவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.