/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ரூ.9 லட்சம் செலவில் கட்டிய அங்கன்வாடி திறப்பு விழா காணாமலே இடித்து அகற்றம்
/
ரூ.9 லட்சம் செலவில் கட்டிய அங்கன்வாடி திறப்பு விழா காணாமலே இடித்து அகற்றம்
ரூ.9 லட்சம் செலவில் கட்டிய அங்கன்வாடி திறப்பு விழா காணாமலே இடித்து அகற்றம்
ரூ.9 லட்சம் செலவில் கட்டிய அங்கன்வாடி திறப்பு விழா காணாமலே இடித்து அகற்றம்
ADDED : ஜன 25, 2025 04:57 AM

விருத்தாசலம் : விருத்தாசலம் அருகே நீர்நிலையில் கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டிடம், உயர்நீதிமன்ற உத்தரவின்படி இடித்து அகற்றப்பட்டதால் பரபரப்பு நிலவியது.
கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த சாத்துக்கூடல் கீழ்பாதி ஊராட்சியில், தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ரூ.9 லட்சம் செலவில் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டது. திறப்பு விழா காணாத நிலையில், நீர்நிலையில் கட்டப்பட்டதாக அதே பகுதியை சேர்ந்த சக்திவேல் என்பவர் தொடர்ந்த வழக்கில், அங்கன்வாடி கட்டடத்தை இடித்து அகற்ற சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது.
அதன்படி, வருவாய்த்துறையினர் நேற்று முன்தினம் போலீஸ் பாதுகாப்புடன் பொக்லைன் இயந்திரம் மூலம், அங்கன்வாடி கட்டடத்தை இடிக்கத் துவங்கினர். அப்போது அங்கு வந்த வி.சி., மாவட்ட செயலாளர் நீதிவள்ளல், முன்னாள் ஊராட்சி தலைவர் சக்திவேல், ஒன்றிய கவுன்சிலர் செல்லதுரை உள்ளிட்ட கிராம மக்கள் பொக்லைனை சிறைபிடித்ததால், அதிகாரிகள் திரும்பிச் சென்றனர். நேற்று காலை, தாசில்தார் உதயகுமார் தலைமையில் அங்கன்வாடி கட்டடம் இடித்து அகற்றப்பட்டது. அப்போது, அங்கன்வாடி கட்டடம் நீர்நிலையில் உள்ளதாக யு.டி.ஆர்., எனப்படும் நிலத்தின் தரவு பதிவை புதுப்பித்தல் பதிவேட்டில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
திறப்பு விழா காணாத கட்டடத்தை அதிகாரிகள் இடித்து அகற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ரூ.9 லட்சம் போச்சே...
ஊராட்சிகளில் புதிதாக கட்டடம் கட்டும் பணிக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சான்று தருவது வழக்கம். ஆனால், யு.டி.ஆர்., பட்டாவில் உள்ள நிலத்தில் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டது எப்படி. வருவாய் அதிகாரிகள் அனுமதி வழங்கிய இடத்தில் கட்டப்பட்ட அங்கன்வாடியை, அதே துறை அதிகாரிகள் இடித்து அகற்றியுள்ளனர்.
இதனால் மக்களின் வரிப்பணம் ரூ. 9 லட்சம் பாழாகியுள்ளது. கடந்தாண்டு கட்டி முடித்த அங்கன்வாடியை இதுவரை திறக்காதது ஏன் என கிராம மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.