/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அங்கன்வாடி மையம் காட்சிப் பொருளான அவலம்
/
அங்கன்வாடி மையம் காட்சிப் பொருளான அவலம்
ADDED : ஜூலை 09, 2025 08:44 AM

பெண்ணாடம் அடுத்த கோனுார் ஊராட்சியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். கீழக்கோனுாரில் புதிய அங்கன்வாடி மையம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் வாடகை கட்டடத்தில் துவங்கப்பட்டது.
அங்கு போதிய இடவசதி இல்லாததால் குழந்தைகள் அமர்ந்து படிக்கவும், சமைக்க முடியாமல் சிரமம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து, கடந்தாண்டு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் ரூ. 14 லட்சம் செலவில் புதிதாக அங்கன்வாடி மையம் கட்டி, முடிக்கப்பட்டது. ஆனால், மின் இணைப்பு மற்றும் போர்வெல் அமைக்காததால் இதுவரை பயன்பாட்டிற்கு வராமல் காட்சிப்பொருளாக உள்ளது. எனவே, கோனுாரில் காட்சிப்பொருளான புதிய அங்கன்வாடி மையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.