/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
/
அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 13, 2024 07:03 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம் : விருத்தாசலம் ஒன்றிய அலுவலகத்தில் சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட கன்வீனர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார்.
ராதா வரவேற்றார். மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ் துவக்கி வைத்து பேசினார். அதில், குறைந்தபட்ச ஓய்வூதியமாக 7,850 ரூபாய் வழங்க வேண்டும்.
குடும்ப ஓய்வூதியம், அகவிலைப்படி, மருத்துவப்படி, பண்டிகை முன்பணம், மருத்துவக் காப்பீடு, குடும்ப நல நிதி உள்ளிட்ட தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷமிடப்பட்டது.
கலைச்செல்வி நன்றி கூறினார்.