/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அண்ணாதுரை பிறந்தநாள் பொதுக் கூட்டம்
/
அண்ணாதுரை பிறந்தநாள் பொதுக் கூட்டம்
ADDED : செப் 23, 2024 08:23 AM

பெண்ணாடம் : அ.தி.மு.க., திட்டக்குடி தொகுதி சார்பில், பெண்ணாடம் அடுத்த முருகன்குடியில் அண்ணாத்துரை பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு, நல்லுார் தெற்கு ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மங்களூர் ஒன்றிய செயலாளர்கள் இளங்கோவன், பாண்டியன், நல்லுார் மேற்கு ஒன்றிய செயலாளர் முத்து, நகர செயலாளர் நீதிமன்னன், மாவட்ட பொருளாளர் அய்யாசாமி, மாவட்ட கவுனசிலர் சுப்ரமணியன் முன்னிலை வகித்தனர். ஜெ., பேரவை ஒன்றிய செயலாளர் வாசுதேவன் வரவேற்றார்.
ஒன்றிய அவைத்தலைவர் பாலசுப்ரமணியன், இணை செயலாளர் ராஜேஸ்வரி, ஒன்றிய துணை செயலாளர் நடேசன், பொருளாளர் முத்துக்கருப்பன், பாசறை தலைவர் கபிலன் மாவட்ட பிரதிநிதிகள் ஜெயக்குமார், ராஜலட்சுமி, முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் ராமலிங்கம் உட்பட பலர் பங்கேற்றனர்.
புவனகிரி எம்.எல்.ஏ., அருண்மொழிதேவன், அமைப்பு செயலாளர் முருகுமாறன், தலைமை கழக பேச்சாளர் நெல்லையப்பன் பாலாஜி ஆகியோர் பேசினர். மாவட்ட பிரதிநிதி கலியபெருமாள் நன்றி கூறினார்.