தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ அண்ணாதுரை நினைவு தினம் அனுசரிப்பு

 அண்ணாதுரை நினைவு தினம் அனுசரிப்பு

 அண்ணாதுரை நினைவு தினம் அனுசரிப்பு


ADDED : பிப் 04, 2026 07:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 04, 2026 07:02 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நெய்வேலி பிப். 4-: கடலுார் மாவட்டத்தில் பல்வேறு கட்சிகள் சார்பில் முன்னாள் முதல்வர் அண்ணாதுரை நினைவு தினம் அனுசரிக்கப் பட்டது.

நெய்வேலி சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., தலைமையில் தி.மு.க., வினர் அமைதி ஊர்வலம் சென்று, நெய்வேலி மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவித்தனர்.

மாவட்ட பொருளாளர் தண்டபாணி, முன்னாள் பண்ருட்டி ஒன்றிய சேர்மன் சபா பாலமுருகன், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் ராசவன்னியன், புகழேந்தி, என்.எல்.சி., முன்னாள் தொ.மு.ச., தலைவர்கள் திருமாவளவன், வீரராமச்சந்திரன் உடனிருந்தனர்.

பண்ருட்டி நகராட்சி சேர்மன் ரா ஜேந்திரன் தலைமையில், மாவட்ட அவை தலைவர் நந்தகோபாலகிருஷ்ணன் மாவட்ட துணை செயலாளர் தணிகைசெல்வம், ஆனந்தி சரவணன், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் கதிர்காமன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் பலராமன் மாலை அணிவித்தனர்.

நகர அ.தி.மு.க., செயலாளர் மோகன் தலைமையில், அவை தலைவர் ராஜதுரை, ஒன்றிய செயலாளர் ராமசாமி, ஜெ., பேரவை செயலாளர் செல்வம், நகர இணை செயலாளர் சத்யா கலைமணி, உமா மகேஸ்வரி ஸ்ரீதர் மாலை அணிவித்தனர்.

புவனகிரி ம.தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினர் ரவி, அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவித்தார். மாவட்ட பிரிதிநிதி வேல்முருகன், ஒன்றிய செயலாளர் ஆனந்தராஜ், சுந்தர், வேலு ஆனந்தன், சண்முகம் உடனிருந்தனர்.

ஸ்ரீமுஷ்ணம் தி.மு.க., ஒன்றிய செயலாளர் தங்க ஆனந்தன் தலைமையில் நகர செயலாளர் செல்வகுமார், மாவட்ட விவசாய பிரிவு கிருஷ்ணமூர்த்தி, வர்த்தக பிரிவு முத்துராமலிங்கம்,கலை இலக்கிய அணி ராஜேந்திரன், விளையாட்டு மேம்பாட்டு அணி சதீஷ்குமார் பங்கேற்றனர்.

அ.தி.மு.க., நகர செயலாளர் பூமாலை கேசவன் தலைமையில் முன்னாள் எம்.எல்.ஏ. முருகுமாறன் மாலை அணிவித்தார். ஒன்றிய செயலாளர்கள் நவநீதகிருஷ்ணன், ஜோதி பிரகாஷ், மாவட்ட விவசாய பிரிவு குணசேகரன், சண்முகம், முன்னாள் ஒன்றிய சேர்மன் லதா ஜெகஜீவன்ராம் உடனிருந்தனர்.

விருத்தாசலம் விருத்தாசலத்தில் தி.மு.க., நகர செயலாளர் தண்டபாணி தலைமையில், சேர்மன் சங்கவி முருகதாஸ் மாலை அணிவித்தார். துணைச் செயலாளர் ராமு, நகர தலைவர் செங்குட்டுவன், பொருளாளர் மணிகண்டன், வழக்கறிஞர் அருள்குமார் உடனிருந்தனர். விஜயமாநகரம் கிராமத்தில், வடக்கு ஒன்றிய தி.முக., செயலாளர் கோவிந்தசாமி தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us