/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அண்ணாதுரை பிறந்த நாள் சைக்கிள், மாரத்தான் போட்டி வரும் 27, 28 ல் கடலுாரில் நடக்கிறது
/
அண்ணாதுரை பிறந்த நாள் சைக்கிள், மாரத்தான் போட்டி வரும் 27, 28 ல் கடலுாரில் நடக்கிறது
அண்ணாதுரை பிறந்த நாள் சைக்கிள், மாரத்தான் போட்டி வரும் 27, 28 ல் கடலுாரில் நடக்கிறது
அண்ணாதுரை பிறந்த நாள் சைக்கிள், மாரத்தான் போட்டி வரும் 27, 28 ல் கடலுாரில் நடக்கிறது
ADDED : செப் 25, 2025 03:42 AM
கடலுார் : கடலுாரில் வரும் 27ம் தேதி விரைவு சைக்கிள் போட்டியும், 28 ம் தேதி மாரத்தான் ஓட்டப்போட்டியும் நடக்கிறது.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் சிபிஆதித்யா செந்தில்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் ஆண்டுதோறும் அண்ணா விரைவு சைக்கிள் போட்டி மற்றும் அண்ணா மாரத்தான் ஓட்டப்போட்டியும் நடத்தப்படுகிறது. அதன்படி, வரும் 27ம் தேதி காலை 7மணிக்கு அண்ணா விரைவு சைக்கிள் போட்டியும், 28ம் தேதி காலை 7மணிக்கு அண்ணா மாரத்தான் போட்டி யும் நடக்கிறது.
இரு போட்டிகளும் கடலுார் அக்ஷரா வித்யாஸ்ரம் பள்ளியில் இருந்து புறப்பட்டு கஸ்டம்ஸ் ரோடு சாவடி மருதாடு வழியாக வெள்ளப்பாக்கம் வரை சென்று திரும்பவும், அதே வழியாக அக்ஷரா வித்யாஸ்ரமம் பள்ளி வரை வந்தடையும். போட்டிகள் மாணவர்களுக்கு தனியாகவும், மாணவிகளுக்கு தனியாகவும் நடக்கிறது. வயது 1.1.2025 தேதியின் படி கணக்கிடப்படும்.
அண்ணா விரைவு சைக்கிள் போட்டியில் 13வயதுக்குட்பட்டவர்களுக்கு 1.1.2013க்குப்பிறகு பிறந்தவர்கள் மாணவர்களுக்கு 15 கி.மீ,. மாணவிகளுக்கு 10 கி.மீ.,துாரம். 15வயதுக்குட்பட்டவர்களுக்கு 1.1.2011க்கு பிறகு பிறந்தவர்கள் மாணவர்களுக்கு 20கி.மீ., மாணவிகளுக்கு 15 கி.மீ.,துாரம். 17வயதுக்குட்பட்டவர்களுக்கு (வயதுவரம்பு 1.1.2009க்குப் பிறகு பிறந்தவர்கள்) மாணவர்களுக்கு 20கி.மீ., மாணவிகளுக்கு 15கி.மீ.,துாரம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக 5ஆயிரம் ரூபாயும், இரண்டாம் பரிசாக 3ஆயிரம், மூன்றாம் பரிசாக 2ஆயிரம் ரூபாயும், 4 முதல் 10வரை தலா 250 வழங்கப்படும்.
போட்டியில் இந்தியாவில் தயாராகும், சாதாரண ஹேண்ட்பார் கொண்ட, சாதாரண மிதிவண்டிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மாரத்தான் போட்டியில் 17 வயது முதல் 25 வயதுக்குட்பட்டவர்கள் ( 1.1.2001க்கும் 1.1.2009க்கும் இடையே பிறந்தவர்கள்) ஆண்களுக்கு 8 கி.மீ., மகளிருக்கு 5 கி.மீ.,துாரம், 25 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு (1.1.2001க்கு முன் பிறந்தவர்கள்) ஆண்களுக்கு 10கி.மீ.,மகளிருக்கு 5கி.மீ.,துாரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக 5ஆயிரம் ரூபாயும், இரண்டாம் பரிசாக 3ஆயிரம் ரூபாயும், மூன்றாம் பரிசாக 2ஆயிரம் ரூபாயும், 4 முதல் 10 வரை தலா ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும்.
முதல் 10 இடங்களை பெற்று வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழும் வழங்கப்படும். போட்டியில் பங்கேற்க ஒரு மணி நேரம் முன்னரே போட்டி நடக்கும் இடத்தில் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
போட்டிகளில் பங்கேற்க விருப்பமுள்ள மாணவர்கள் நேரடியாக போட்டி நடக்கும் இடத்திற்கு காலை 6மணிக்கு வந்து பெயர்களை பதிவு செய்து, மார்பு எண் பெற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.