ADDED : ஜூன் 05, 2026 04:31 AM

விருத்தாசலம்: பா.ஜ., முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை மீண்டும் பா.ஜ., மாநில தலைவராக வர வேண்டும் என, கொளஞ்சியப்பர் கோவிலில் பா.ஜ., வினர் நேற்று பிராது கட்டினர்.
பா.ஜ., கட்சியின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பிறந்தநாளையொட்டி, விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் கோவிலில், பா.ஜ., முன்னாள் மாவட்ட செயலர் செந்தில்குமார் தலைமையில் நேற்று சிறப்பு வழிபாடு செய்தனர். அதைத்தொடர்ந்து, மீண்டும் மாநில தலைவராக அண்ணாமலை வரவேண்டும். அடுத்த சட்டசபை தேர்தலில் அண்ணாமலை முதல்வராக வேண்டும் என கூறி பா.ஜ., வினர் பிராது கட்டினர்.
இதில், வடக்கு ஒன்றிய தலைவர் பரமசிவம், நிர்வாகிகள் பரந்தாமன், ஜெயராமன், முருகவேல், சதீஷ் மற்றும் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
அண்ணாமலை தனிகட்சி துவங்க உள்ளதாக செய்திகள் வரும் நிலையில், மீண்டும் அவர் பா.ஜ., மாநில தலைவராக வரவேண்டும் என பா.ஜ., வினர் பிராது கட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
