/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அண்ணாமலை நடைபயணம் மாவட்ட செயலர் அழைப்பு
/
அண்ணாமலை நடைபயணம் மாவட்ட செயலர் அழைப்பு
ADDED : ஜன 25, 2024 04:24 AM

புவனகிரி : புவனகிரி சட்டசபை தொகுதியில் இன்று நடக்கும் பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை நடைபயண நிகழ்ச்சியில், பொதுமக்கள் திரளாக பங்கேற்க, அக்கட்சியின் மாவட்ட செயலாளர் திருமாவளவன் அழைப்பு விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை:
பா.ஜ., தமிழக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழக முழுவதும் என் மண்,என் மக்கள் குறித்து நடைபயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து வருகிறார். புவனகிரி சட்டசபை தொகுதியில் இன்று (25ம் தேதி) மாலை 3.00 மணிக்கு புவனகிரி பாலக்கரையில் நடைபயணத்தை துவங்கி, கடைவீதி வழியாக, ஒரு வழி பாதை, முத்தாட்சி பிள்ளையார் வீதி, ராகவேந்திரர் கோவில் சாலை வழியாக பஸ் நிலையத்தை வந்தடைகிறார்.
அவரோடு கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் பங்கேற்கின்றனர். தொடர்ந்து சாமுண்டீஸ்வரி கோவில் வளாகத்தில் திறந்தவெளி அரங்கில் பேசுகிறார்.
எனவே, பொதுமக்கள், கட்சி நிர்வாகிகள் கட்சி பாகுபாடு இல்லாமல் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.