/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அண்ணாமலை பல்கலை., தேர்வுகள் ஒத்திவைப்பு
/
அண்ணாமலை பல்கலை., தேர்வுகள் ஒத்திவைப்பு
ADDED : அக் 15, 2024 06:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம்: கனமழை எச்சரிக்கை காரணமாக, சிதம்பரம் அண்ணாமலை பல்கலை கழகம் மற்றும் உறுப்பு கல்லுாரிகளில், இன்று நடைபெற உள்ள அனைத்து தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழக பதிவாளர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
கடலுார் மாவட்டத்தில், கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், பள்ளி கல்லுாரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.
அதையொட்டி, இன்று (15ம் தேதி) அண்ணாமலை பல்கலைகழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லுாரிகளில் நடைபெற இருந்த தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது.
இன்று நடக்கவிருந்த தேர்வுகள், மீண்டும் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.