/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அண்ணாமலை பல்கலை., தேர்வுகள் ஒத்திவைப்பு
/
அண்ணாமலை பல்கலை., தேர்வுகள் ஒத்திவைப்பு
ADDED : நவ 27, 2024 06:36 AM
சிதம்பரம், மழை முன்னெச்சரிக்கை காரணமாக சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. இன்று நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது
இதுகுறித்து பதிவாளர் பிரகாஷ் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
கடலூர் மாவட்டத்தில் மழை முன்னெச்சரிக்கை காரணமாக, பள்ளி மற்றும் கல்லுாரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. அதனை ஒட்டி சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்கலைக்கழகத்தில் இன்று (27 ம் தேதி) நடைபெற இருந்த அனைத்து தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெற இருந்த தேர்வுகளுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.