ADDED : ஜன 25, 2026 04:01 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம்: ஸ்ரீமுஷ்ணம் திருஞானம் இன்டர்நேஷனல் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. பள்ளி தாளாளர் பாலசுந்தரம் தலைமை தாங்கினார். துணை தாளாளர் அன்புமதி பாலசுந்தரம் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் லிண்டா அலெக்சாண்டர் ஆண்டறிக்கை வாசித்தார்.
ஆசிரியர் சிவப்பிரியா வரவேற்றார். காந்திகிராம் பல்கலை துணைவேந்தர் பஞ்சநதம், அண்ணாமலை பல்கலை முன்னாள் பதிவாளர் ஞானதேவன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி பேசினர்.
ஆசிரியர்கள் அருள்மொழி, விஜயா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். தொடர்ந்து, மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன
ஆசிரியர் புஷ்பா நன்றி கூறினார்.

