ADDED : பிப் 20, 2024 02:48 AM
அ நிறம் | அளவு
விருத்தாசலம் : விருத்தாசலம் அடுத்த மன்னம்பாடி அரசு உயர்நிலை பள்ளி ஆண்டு விழா நடந்தது.
தலைமை ஆசிரியர் வீரபாண்டியன் தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் மூக்காயி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் நடேசன் முன்னிலை வகித்தனர். உதவி தலைமை ஆசிரியர் ரத்தின புகழேந்தி வரவேற்றார். போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன. தமிழ் ஆசிரியர் சம்பத் நன்றி கூறினார். அறிவியல் ஆசிரியர் தனேந்திரன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். ஆசிரியர்கள் சாந்தி, பிரியா, துவக்கபள்ளி தலைமை ஆசிரியர் விஜயா மற்றும் பெற்றோர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
