ADDED : பிப் 21, 2024 07:58 AM

அ நிறம் | அளவு
கடலுார் : பூண்டியாங்குப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆண்டுவிழா நடந்தது.
தலைமை ஆசிரியை கலையரசி வரவேற்றார். ஊராட்சி துணைத் தலைவர் ராஜசேகர் தலைமை தாங்கினார். ஊர் முக்கியஸ்தர் வீரமணி, முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் தியாகராஜன், ஆணையம்பேட்டை ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர்.
ஆசிரியர் பயிற்றுனர் இளங்கோவன், பொறியாளர் மோகன் குமார், கலந்து கொண்டனர்.
ஆசிரியை மாலதி ஆண்டறிக்கை வாசித்தார். ஆசிரியை தேவி மற்றும் மார்க் ஜெசி நன்றி கூறினர்.
