
சிதம்பரம்: சேத்தியாத்தோப்பு அடுத்த, ஒரத்துார், திருவள்ளுவர் மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.
தலைமை ஆசிரியர் செல்வராசு தலைமை தாங்கினார். ஆசிரியர் சம்பத் வரவேற்றார். பள்ளி குழுத்தலைவர் அருள்மொழி பொன்முடி, பள்ளிக்குழு செயலாளர் பாரிவேல், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் விஜயலதா, பள்ளிக்குழு உறுப்பினர்கள் அருள் வேந்தன், இந்திராணி , அறிவழகி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக கிரீடு தொண்டு நிறுவன தலைவர் நடன சபாபதி, ஆசிரியர் ரவிச்சந்திரன் பங்கேற்று, பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கி பேசினர்.
ஆசிரியர் சுசித்ரா ஒருங்கிணைப்பில், கலை நிகழ்ச்சிகள் நடந்தன. ஏற்பாடுகளை உதவி தலைமை ஆசிரியர் தவச்செல்வன், ஆசிரியர்கள் வீரபாண்டியன், விக்டோரியா எடல் குயின், தமிழ்ச்செல்வி, ராஜ்குமார், ரமேஷ் ஆகியோர் செய்தனர். ஆசிரியர் குமார் நன்றி கூறினார்.

