தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ செயின் பறிப்பு வழக்கு மேலும் ஒருவர் கைது

செயின் பறிப்பு வழக்கு மேலும் ஒருவர் கைது

செயின் பறிப்பு வழக்கு மேலும் ஒருவர் கைது


ADDED : செப் 12, 2026 06:11 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 12, 2026 06:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ராமநத்தம்: ராமநத்தம் அருகே பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் தலைமறைவான சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளியைச் சேர்ந்தவர் முத்துசாமி மனைவி மலர்மொழி,57; இவர், கடந்த மாதம் 3ம் தேதி ராமநத்தம் கிழக்கு தெருவில் உள்ள உறவினர் சின்னசாமி வீட்டில் கட்டிலில் அமர்ந்திருந்தார். அப்போது, அவ்வழியே பைக்கில் வந்த மர்ம நபர்கள் இருவர், மலர்விழி கழுத்தில் அணிந்திருந்த 2 சவரன் செயினை பறித்து சென்றனர்.

இது குறித்த புகாரின் பேரில் ராமநத்தம் சப் இன்ஸ்பெக்டர் ஜம்புலிங்கம் வழக்கு பதிந்து, மர்ம நபர்களை தேடி வந்தார். சி.சி.டி.வி.,பதிவுகளை ஆய்வு செய்ததன் அடிப்படையில் கடந்த 10ம் தேதி சென்னை, வாகையூரில் பதுங்கியிருந்த திருவான்மியூரைச் சேர்ந்த 17 வயது சிறுவனை கைது செய்தனர். இவர் அளித்த தகவலின் பேரில், திருப்பூர் மாவட்டம், காங்கேயத்தில் பதுங்கியிருந்தவரை அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவனை போலீசார் நேற்று கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us