/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விருத்தாசலம் அருகே கார் கவிழ்ந்த விபத்தில் மேலும் ஒருவர் பலி
/
விருத்தாசலம் அருகே கார் கவிழ்ந்த விபத்தில் மேலும் ஒருவர் பலி
விருத்தாசலம் அருகே கார் கவிழ்ந்த விபத்தில் மேலும் ஒருவர் பலி
விருத்தாசலம் அருகே கார் கவிழ்ந்த விபத்தில் மேலும் ஒருவர் பலி
ADDED : மார் 08, 2024 06:39 AM
விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே கார் கவிழுந்த விபத்தில் மேலும் ஒருவர் இறந்தார்.
வேலுார் மாவட்டம், குடியாத்தம் பகுதியை சேர்ந்தவர் சபியுல்லா மகன் மகன் தப்ரேஸ் அகமது, 24. இவர் தனது மாமனார் அக்ரம் பாஷா, 50; மாமியார் சாய்னா, 38, மனைவி அஜிரா, 19; தாய் நஸ்ரின் பானு, 40; மற்றும் குழந்தைகள் இருவர் என தனது குடும்பத்தினருடன் காரில் நாகூர் தர்காவிற்கு புறப்பட்டார்.
நேற்று முன்தினம் அதிகாலை ௪ மணிக்கு விருத்தாசலம் - சிதம்பரம் சாலையில், கம்மாபுரம் அருகே உள்ள வி.சாத்தப்பாடி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த பாலத்தின் தடுப்புகட்டையில் மோதி, அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில், சாய்னா, 38; சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயமடைந்த தப்ரேஸ் அகமது விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லுாரியில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
மேலும், படுகாயமடைந்த அக்ரம் பாஷா, நஸ்ரின் பானு, அஜிரா மற்றும் 2 குழந்தைகள் ராணிப்பேட்டையில் உள்ள மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அக்ரம் பாஷா நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில், கம்மாபுரம் போலீசார் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.

