/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான்
/
போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான்
ADDED : செப் 29, 2024 06:14 AM

விருத்தாசலம்: மங்கலம்பேட்டை அடுத்த நடியப்பட்டு கிராமத்தில், போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடந்தது.
மங்கலம்பேட்டை அடுத்த நடியப்பட்டு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில், மாணவர் காவல் படை துவங்கப்பட்டது. இதையொட்டி, போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி நடந்தது. நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியர் பேசில்ராஜ் தலைமை தாங்கினார்.
முன்னாள் ஊராட்சி தலைவர் சிவகோதண்டம், உதவி தலைமை ஆசிரியர் சந்தோஷ்குமார், ஆசிரியர்கள் வெங்கடேசன், ஜெகன், ஜோதி முன்னிலை வகித்தனர். ஓவிய ஆசிரியர் முருகன் வரவேற்றார். மாரத்தான் ஓட்டத்தை டி.எஸ்.பி., கிரியா சக்தி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
பள்ளியில் பயிலும் நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் போட்டியில் பங்கேற்றனர். விருத்தாசலம் டி.இ.ஓ., துரைபாண்டியன் பரிசு, சான்றிதழ் வழங்கினார். தொடர்ந்து, மாணவர்களுக்கு காலை உணவு, பழச்சாறு, பிஸ்கட் வழங்கப்பட்டன.