ADDED : அக் 13, 2024 02:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குள்ளஞ்சாவடி : குள்ளஞ்சாவடி அரசு மேல்நிலைப் பள்ளியில் போதைப் பொருள் பழக்கத்திற்கு எதிரான உறுதி மொழியை மாணவர்கள் எடுத்து கொண்டனர்.
மேலும், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மேம்பாடு கல்வி வளர்ச்சி ஆகியவை குறித்த விழிப்புணர்வு வாசகங்களை உறுதி மொழியில் எடுத்துக் கொண்டனர்.
பள்ளி தலைமை ஆசிரியர் கொளஞ்சியப்பன், தமிழ் ஆசிரியர் ராமநாதன், உதவி தலைமை ஆசிரியர் பாலாஜி, உடற்கல்வி ஆசிரியர் செந்தில்குமரன் உள்ளிட்டோர் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினர்.