/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஆக்கிரமிப்பு அகற்ற எதிர்ப்பு: சிதம்பரத்தில் பரபரப்பு
/
ஆக்கிரமிப்பு அகற்ற எதிர்ப்பு: சிதம்பரத்தில் பரபரப்பு
ஆக்கிரமிப்பு அகற்ற எதிர்ப்பு: சிதம்பரத்தில் பரபரப்பு
ஆக்கிரமிப்பு அகற்ற எதிர்ப்பு: சிதம்பரத்தில் பரபரப்பு
ADDED : அக் 01, 2024 06:48 AM

சிதம்பரம்: சிதம்பரத்தில் குளக்கரை ஆக்கிரமிப்பு அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து, பொக்லைன் இயந்திரத்தை சிறை பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சிதம்பரம், சி. தண்டடேஸ்வரநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட பரமேஸ்வரநல்லுாரில் ஆலங்குளம் உள்ளது. இக்குளத்தை சுற்றி 50 ஆண்டுகளாக பொதுமக்கள் வீடு கட்டி, வசித்து வருகின்றனர். சிதம்பரத்தில் கோர்ட் உத்தரவுப்படி நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வரும் நிலையில், ஆலங்குளம் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற, கடந்த மாதம் வருவாய் துறை அதிகாரிகள் முயற்சித்தனர்.
அப்போது, அப்பகுதி மக்களுக்கு மாற்று இடம் கொடுத்துவிட்டு அகற்றும்படி, மா.கம்யூ., கட்சியினர், போராட்டம் அறிவித்தனர். சமாதானப்பேச்சு வார்த்தையில், மாற்று இடம் வழங்கிய பின்பு ஆக்கிரமிப்பு அகற்ற முடிவெடுக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்ற மதியம் வருவாய் துறையினர், தாசில்தார் ஹேமா ஆனந்தி தலைமையில், டி.எஸ்.பி., லாமேக் மற்றும் போலீசார் பாதுகாப்புடன், ஆக்கிரமிப்பு அகற்ற சென்றனர். அப்போது, 100 க்கும் மேற்பட்ட பொதுமக்கள், பொக்லைன் இயந்திரம் முன்பு அமர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போலீசார் 10 க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் நடந்த பேச்சு வார்த்தையில், அனைத்து வீடுகளும் இடிக்கப்படவில்லை. சொந்த இடம் இருந்தும் இங்கு ஆக்கிரமித்து வீடு கட்டியுள்ள 3 பேரின் இடத்தை மட்டுமே அகற்றப்பட உள்ளது என தெரிவித்தனர். அதனை தொடர்ந்து மீண்டும் ஆக்கிரமிப்பு பணிகள் துவங்கி, சம்மந்தப்பட்ட 3 வீடுகள் மட்டும் இடித்து அகற்றப்பட்டது.