/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அப்போலோ நர்சிங் கல்லுாரி மாணவிகள் பேரணி
/
அப்போலோ நர்சிங் கல்லுாரி மாணவிகள் பேரணி
ADDED : ஆக 10, 2025 02:46 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : வேப்பூர் சாய் அப்போலோ நர்சிங் கல்லுாரி சார்பில் 'ரத்த சோகை இல்லா' கடலுார் மாவட்டம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
டாக்டர் காயத்ரி தலைமை தாங்கினார். கல்லுாரி முதல்வர் அம்பிகா தங்கதுரை, பிரவீன்குமார் முன்னிலை வகித்தனர். ரோட்டரி சங்க மண்டல துணை ஆளுநர் ஜனனி தாஸ், கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார்.
பேரணியில் மாணவிகள், விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி கூட்டுரோடு, சேலம்-விருத்தாசலம் சாலை வழியாக வேப்பூர் பஸ் ஸ்டாண்ட் வரை வந்தனர்.
பேரணியில் கல்லுாரி துணை முதல்வர் மற்றும் விரிவுரையாளர்கள் பங்கேற்றனர்.
இணை இயக்குனர் பிரியங்கா நன்றி கூறினார்.

