
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீமுஷ்ணம் : ஸ்ரீமுஷ்ணத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட சிறப்பு முகாமிற்கு வீடு வீடாக விண்ணப்ப படிவம் வழங்கும் பணி நடந்தது.
ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சியில் வரும் 6ம் தேதி 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட சிறப்பு முகாம் நடக்கிறது. இம்முகாமில் பங்கேற்கும் பொதுமக்களுக்கு கோரிக்கை விண்ணப்பங்கள் வழங்கும் பணியை சேர்மன் செல்வி ஆனந்தன் துவக்கி வைத்தார்.
தி.மு.க., ஒன்றிய செயலாளர் தங்க ஆனந்தன், துணை தலைவர் முத்தமிழரசி பார்த்திபன், வார்டு கவுன்சிலர் பன்னீர்செல்வம், இளநிலை உதவியாளர் ராஜசேகர் உடனிருந்தனர்.

