தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ சுதந்திர தின விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

 சுதந்திர தின விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

 சுதந்திர தின விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு


ADDED : ஜூன் 11, 2026 08:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 11, 2026 08:05 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலுார்: சுதந்திர தின விருதுக்கு இணையதளம் வழியாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:

சமூக நலன் சார்ந்த நடவடிக்கைகள் பெண்குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் மற்றும் மகளிர் நலனுக்காக தொண்டாற்றிய சமூக சேவகர்கள் மற்றும் சமூக சேவை தொண்டு நிறுவனங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின விழாவின்போது தமிழக முதல்வரால் இவ்விருது வழ ங்கப்பட்டு வருகிறது.

2026ம் ஆண்டின் சுதந்திர தினத்தன்று இவ்விருது சிறந்த சமூக சேவகருக்கு 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழும், சிறந்த தொண்டு நிறுவனத்திற்கு ஒரு லட்சம் ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழும் வழங்கப்பட உள்ளது.

கடலுார் மாவட்டத்தில் இவ்விருது பெறுவதற்கு விண்ணப்பங்கள் அனைத்தும் தமிழக அரசின் விருதுகள் (https://awards.tn.gov.in) என்ற இணையதளத்தில் வரும், 19ம் தேதி வரை பதிவேற்றம் செய்யலாம்.

குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் சமூக நலனை சார்ந்த நடவடிக்கைகள், பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் மொழி, இனம், பண்பாடு, அறிவியல் மற்றும் நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணிபுரியும் சமூக சேவகர் மற்றும் சமூக சேவை தொண்டு நிறுவனங்கள் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனமாகவும் இருத்தல் வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us