ADDED : ஏப் 26, 2026 09:17 PM

புவனகிரி: பணி நிறைவு பெற்ற ஆசிரியருக்கு பாராட்டு மற்றும் மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.
புவனகிரி அருகே, பு.உடையூர் தொடக்க பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் மணிமேகலை வரவேற்றார்.
வட்டார வள மைய மேற்பார்வையாளர் அருள்சங்கு, தலைக்குளம் பொறுப்பு தலைமை ஆசிரியர் ராஜாராமன் முன்னிலை வகித்தனர்.
பு.உடையூர் தொடக்க பள்ளியில் உதவி ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்ற மெர்சிரோஸ் சந்தனமேரியின் கல்வி சேவையை பாராட்டி, ஆசிரியர் முன்னேற்ற சங்க நிறுவனர் துரைமணிராஜன் நினைவுப்பரிசு வழங்கினார்.
நிகழ்ச்சியில் பள்ளி மேலாண்மை குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள், பெற்றோர், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் பள்ளியில் நடத்தப்பட்ட விளையாட்டு மற்றும் கலை விழாவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.
மெர்சிரோஸ்சந்தனமேரி ஏற்புரை நிகழ்த்தினார்.
