ADDED : மார் 10, 2026 04:56 AM

பரங்கிப்பேட்டை: ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஓய்வுப்பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
வட்டார தலைவர் வெங்கட்ராமன் தலைமை தாங்கினார். செயலாளர் சம்பத்குமார் வரவேற்றார். மாவட்ட ஓய்வு பிரிவு செயலாளர்கள் சண்முகம், ராம்குமார், வட்டார மகளிரணி செயலாளர் மங்கையர்கரசி முன்னிலை வகித்தனர்.
ஓய்வுப்பெற்ற தலைமை ஆசிரியர் ருக்மணி, ஆசிரியர்கள் குமாரகிருஷ்ணன், தாஸ், இந்திராகாந்தி ஆகியோருக்கு, மாநில பொதுச்செயலாளர் தாஸ் நினைவுப்பரிசு வழங்கி பாராட்டினார்.
வட்டார கல்வி அலுவலர் அறிவழகன், மாவட்ட செயலாளர் பாலமுரளிகிருஷ்ணன், பொருளாளர் ராஜ்குமார், தலைவர் சிவகுமார், மாநில துணைத்தலைவர் பாபு, குமரவேல், இளங்கோவன், பரதச்சக்கரவர்த்தி, பிரவின், சண்முகபிரியா, சுபாஷிணி, தனலட்சுமி, மவுனிகா உட்பட பலர் பங்கேற்றனர். வட்டார பொருளாளர் குப்புசாமி நன்றி கூறினார்.
