ADDED : ஜன 05, 2026 04:02 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கள்ளக்குறிச்சியில் நடந்த சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு போட்டிகளில், கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றனர்.
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வையொட்டி கல்லை கலைக்கூடம் சார்பில், மாநில அளவில் பள்ளி மாணவர்களுக்கான சிலம்பம், யோகா, கராத்தே போட்டிகள் கள்ளக்குறிச்சியில் நடந்தது.
இதில், கடலுார் மாவட்டத்தில் இருந்து பள்ளி மாணவர்கள் 18 பேர் பெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ், பரிசு வழங்கப்படட்து.
பயிற்சியாளர் குணசேகருக்கு, கலைசேவகர் விருதை நடிகர் மீசை ராஜேந்திரன் வழங்கினார்.

