/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விளையாட்டு போட்டியில் வென்ற மாணவிகளுக்கு பாராட்டு விழா
/
விளையாட்டு போட்டியில் வென்ற மாணவிகளுக்கு பாராட்டு விழா
விளையாட்டு போட்டியில் வென்ற மாணவிகளுக்கு பாராட்டு விழா
விளையாட்டு போட்டியில் வென்ற மாணவிகளுக்கு பாராட்டு விழா
ADDED : அக் 13, 2024 01:07 AM

ஸ்ரீமுஷ்ணம் : ஸ்ரீமுஷ்ணத்தைச் சேர்ந்த மாணவி சுபாஷினி உஸ்பெஸ்கிஸ்தானில் நடந்த உலக கோப்பைக்கான கிக் பாக்சிங் போட்டியில் பங்கேற்று இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றார்.
அதேபோன்று ஸ்ரீமுஷ்ணம் பி.பி.ஜெ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவி நந்தினி தேக்வாண்டோ 46 கிலோ எடைப்பிரிவில் தங்கம் வென்று பஞ்சாபில் நடைபெற உள்ள தென்மண்டல அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
போட்டிகளில் வென்ற மாணவிகளுக்கு பாராட்டு விழா நடந்தது.
இதில் பி.பி.ஜெ. கல்லூரி தாளாளர் பிரகாஷ், ரோட்டரி கிளப் தலைவர் ரவிசுந்தர், செயலாளர் குருராஜன், துணைத்தலைவர் அகமது அலி, உடற்கல்வி ஆசிரியர் சத்தியராஜ் உள்ளிட்டோர் சாதன படைத்த மாணவிகளை பாராட்டி ஊக்கப்பரிசு அளித்தனர்.