/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அரிஸ்டோ பப்ளிக் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
/
அரிஸ்டோ பப்ளிக் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
ADDED : மார் 29, 2025 04:39 AM

கடலுார்: மத்திய அரசின் விருது பெற்ற, கடலுார் அரிஸ்டோ பப்ளிக் பள்ளி மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் பாராட்டு விழா நடந்தது.
மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையால் நடத்தப்படும் 2024-25ம் ஆண்டிற்கான இன்ஸ்பயர் மானக் விருதை, கடலுார் அரிஸ்டோ பப்ளிக் பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு சுகன், 7ம் வகுப்பு நித்திஷ் ஆகியோர் வென்றனர்.
விருதுடன் அடுத்தகட்ட ஆய்வுக்கான ஊக்கத்தொகை மற்றும் உயர்கல்விக்கான சூப்பர் நியூமரரி இடங்களுக்கு தகுதி உடையவர்களாக அறிவிக்கப்பட்டனர். தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்று விருது பெற்ற மாணவர்களை, பள்ளி தலைவர் சிவக்குமார், முதல்வர் பாண்டே பாராட்டினர். அரிஸ்டோ பப்ளிக் பள்ளியில் உள்ள அடல் ஆய்வகம், தேசிய அளவிலான போட்டியில் மாணவர்கள் வெற்றி பெறக் காரணமாக இருந்தது என மாணவர்கள் தெரிவித்தனர்.