தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கல்லுாரி மாணவர்களுக்கு பாராட்டு

 கல்லுாரி மாணவர்களுக்கு பாராட்டு

 கல்லுாரி மாணவர்களுக்கு பாராட்டு


ADDED : மார் 14, 2026 05:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 14, 2026 05:27 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வடலூர்: வடலுாரில், பொது சேவையில் ஈடுபட்ட கல்லுாரி மாணவர்களை பாராட்டி, சான்றிதழ்கள் அளிக்கப்பட்டன.

தைப்பூச ஜோதி தரிசன திருவிழா அன்னதான சேவையில், தன்னார்வலர்களாக வடலுார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

அவர்களது களப்பணியை பாராட்டி, கடலுார் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை மற்றும், வடலுார் நுகர்வோர் பாதுகாப்பு பேரவை சார்பில் சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது.

கல்லுாரி என்.எஸ்.எஸ்., அமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஜமுனாராணி வரவேற்றார். வடலுார் நுகர்வோர் பாதுகாப்பு பேரவை தலைவர் கல்விராயர் தலைமை தாங்கினார்.

கல்லுாரி முதல்வர் வண்ணமுத்து, கணேசன் முன்னிலை வகித்தனர்.

கல்லுாரி மாணவர்கள், 64 பேர், வடலூர் நுகர்வோர் பாதுகாப்பு பேரவையை சேர்ந்த, 10 பேருக்கு, கடலுார் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் வெங்கடேசன், குறிஞ்சிப்பாடி வட்டார உணவு பாதுகாப்பு அதிகாரி கொளஞ்சி ஆகியோர் பாராட்டி சான்றிதழ்களை வழங்கினர்.

ராஜசேகரன் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us