ADDED : ஜன 23, 2026 06:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி: பண்ருட்டி ரத்தனா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கடந்த அரையாண்டு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
இப்பள்ளியில், கடந்த மாதம் நடந்த அரையாண்டு தேர்வில் அனைத்து வகுப்பிலும் முதல் 3 இடங்களை பெற்ற மாணவர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியர் ஸ்ரீதர் முன்னிலை வகித்தார்.
பள்ளி முதல்வர் ரவி முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு 'ரேங்க்' பேட்ஜ் வழங்கினார்.
மேலும் மாணவர்களிடம் கல்வியின் சிறப்பு குறித்தும், தற்போதைய கால சூழலில் ஒழுக்கத்துடன் கூடிய கல்வி குறித்தும் பேசினார்.

