ADDED : ஏப் 04, 2025 04:53 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: விழுப்புரத்தில் நடந்த பன்னாட்டு அரிமா சங்க மாநாட்டில் கடலுார் நிர்வாகிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்து.
விழுப்புரத்தில் பன்னாட்டு அரிமா சங்க மாவட்ட மாநாடு நடந்தது. மாவட்ட ஆளுநர் சுபாஷ் சந்திரபோஸ் தலைமை தாங்கினார். பன்னாட்டு இயக்குனர் மகேஷ், முன்னாள் பன்னாட்டு இயக்குனர் மதனகோபால், முன்னிலையில், கடலுார் அரிமா சங்க நிர்வாகி திருமலையின் 39 ஆண்டு கால சேவையை பாராட்டி, சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டார்.
ஆளுநர் ராஜாசுப்பிரமணியம், முதல் துணை நிலை ஆளுநர் கனகரத்தினம், இரண்டாம் துணை நிலை ஆளுநர் கமல் கிஷோர், கன்வென்ஷன் சேர்மன் அகர்சந்த், முன்னாள் ஆளுநர் கல்யாண்குமார் வாழ்த்திப் பேசினர்.

