/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சரஸ்வதி வித்யாலயா பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
/
சரஸ்வதி வித்யாலயா பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
ADDED : அக் 15, 2025 11:12 PM

கடலுார்: ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
மிஷன் லைப் சுற்றுச்சூழல் மன்றம் சார்பில், கடலுார் துறைமுகம் ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மணாவர்களுக்கு இலவச மரக்கன்று வழங்கப்பட்டது. அந்த மரக்கன்றை வீட்டில் அம்மாவின் உதவியுடன் மாணவர்கள் நட்டு, படத்தை வலைதளத்தில் பதிவிட்டனர்.
இதில் சிறப்பாக செயல்பட்ட மாணவர்களுக்கு மிஷன் லைப் சுற்றுச்சூழல் மன்றம் சார்பில் சான்றிதழ் வழங்கும் விழா பள்ளியில் நடந்தது. பள்ளித்தலைவர் சிவகுமார் தலைமை தாங்கி, மாணவர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.
பள்ளி நிர்வாக செயல்அலுவலர் லட்சுமி சிவகுமார், கடலுார் மாவட்ட சுற்றுச்சூழல் திட்ட ஒருங்கிணைப்பாளர் மனோகரன் முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் உதயகுமார் சாம் வரவேற்றார். பள்ளி ஒருங்கிணைப்பாளர், ஆசிரியர்கள், மாணவர்கள் விழாவில் பங்கேற்றனர்.