/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
எஸ்.டி.சீயோன் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
/
எஸ்.டி.சீயோன் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
ADDED : ஏப் 02, 2025 10:33 PM

சேத்தியாத்தோப்பு; சிதம்பரம் ராகவேந்திரா கல்லுாரியில் நடந்த மாநில அளவிலான கராத்தே போட்டியில் பூதங்குடி எஸ்.டி.சீயோன் பள்ளி மாணவர்கள் ஸ்ரீகாந்த், பவன்குமார், பவித்ரன், தனுஷ், ஆதித்யா, கார்த்திக், அபிநாஸ்ரீ, கார்த்திகா, கவுசிகா, அகிலேஷ், நிறைமதி ஆகியோர் முதல் மூன்று இடங்களிலும், நித்தின், ஆதித்யா, பிரவிதா, அட்சயா ஆகியோர் இரண்டு மற்றும் மூன்றாம் பரிசு பெற்றனர்.
பவன்குமார், தனுஷ், அபிநாஸ்ரீ, கவுசிகா ஆகியோர் கருப்பு பட்டை பெற்றனர்.
கடலுார் ஸ்போர்ட்ஸ் கராத்தே நடத்திய ஜூனியர்களுக்கான மாநில செலக் ஷன் தேர்வில் புவனேஸ்வரன், கார்த்திகா, நித்தின், நிறைமதி, அகிலேஷ், அனிஷ், பவித்ரன், ஆதித்யா ஆகியோர் அடுத்த மாதம் திருச்சியில் ஜூனியர் கராத்தே போட்டியில் தகுதி பெற்றுள்ளனர்.
மாநில போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பள்ளியில் நடந்த பாராட்டு விழாவில் நிர்வாக இயக்குனர் சாமுவேல் சுஜின், குழந்தை நல மருத்துவர் தீபாசுஜின், பள்ளி முதல்வர் ஆண்டனிராஜ், கராத்தே பயிற்சியாளர் சென்சாய் ரங்கநாதன் ஆகியோர் கேடயங்கள் வழங்கினர்.

