/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வில் வித்தை: அரசு கண்டுகொள்ளுமா?
/
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வில் வித்தை: அரசு கண்டுகொள்ளுமா?
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வில் வித்தை: அரசு கண்டுகொள்ளுமா?
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வில் வித்தை: அரசு கண்டுகொள்ளுமா?
ADDED : நவ 27, 2025 04:50 AM
கடலுார்: அரசுப்பள்ளி மாணவர்களுக்கு எட்டாக்கனியாக உள்ள வில்வித்தை பயிற்சி வழங்க, அரசு நடவடிக்கை வழங்க கோரிக்கை எழுந்துள்ளது.
ஆசிய வில்வித்தை, உலக வில்வித்தை, காமன்வெல்த் போட்டிகள் மற்றும் பாராலிம்பிக் வில்வித்தைப் போட்டிகளில் இந்திய அணி சார்பில் வீரர்கள் கடந்த சில ஆண்டுகளில் வெற்றிபெற்று பதக்கங்களை பெற்று வருகின்றனர்.
இதன் எதிரொலியாக இந்தியா மற்றும் தமிழகத்தில் வில்வித்தையில் பயிற்சி பெறுவோரின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் வில்வித்தை விளையாட்டு சேர்க்கப்படவில்லை. இதனால் மாவட்ட அளவில் இப்போட்டி நடத்தப்படாமல் நேரடியாக தேசிய போட்டியில் பங்கேற்பதற்கான தமிழக அணியில் வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்யப் படுகின்றனர்.
இந்த விளையாட்டில் பயிற்சி பெற ஆண்டுக்கு 3லட்ச ரூபாய் முதல் 5லட்ச ரூபாய் வரை செலவு செய்ய வேண்டும் என்பதால், வசதி உள்ள பெற்றோர் மட்டுமே தங்கள் பிள்ளைகளுக்கு பயிற்சி கொடுக்க முன் வருகின்றனர்.
இதனால் ஏழ்மை நிலையில் உள்ள மற்றும் அரசுப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இப்போட்டியில் பயிற்சி எடுக்க முடியாத நிலை உள்ளது.
எனவே, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் மாவட்ட விளையாட்டு மைதானங்களில் வில்வித்தை பயிற்சியாளர்களை நியமித்து அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என பெற்றோர் எதிர்பார்க் கின்றனர்.
இதுகுறித்து பெற்றோர் கூறுகையில், 'ஆரம்ப கட்ட பயிற்சிக்கே, 25ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள வில் வாங்க வேண்டி உள்ளது.
நல்ல பயிற்சி பெற்று தேசிய அளவிலான போட்டிக்கு செல்லும் போதுதான் 'ஸ்பான்சர்கள்' கிடைப்பார்கள்.
இதனால் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு வில்வித்தை விளையாட்டு எட்டாக்கனியாக உள்ளது.
அரசுப்பள்ளி மாணவர்களுக்கும் வில்வித்தை பயிற்சி, தமிழக அரசு நடவடிக்கை எடு க்க வேண்டும்,' என்றனர்.

