ADDED : ஜூன் 07, 2024 06:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : குடிப்பதை மனைவி கண்டித்ததால், துாக்குப்போட்டு கணவர் தற்கொலை செய்து கொண்டார்.கடலுார் தேவனாம்பட்டினத்தை சேர்ந்தவர் ஜெகதீசன், 39.
மீனவர். குடிப்பழக்கம் உடையவர். இவர், தினமும் குடித்துவிட்டு வருவதுடன், வீட்டு செலவுக்கும் பணம் தருவதில்லை என, தெரிகிறது. இதனால், ஜெகதீசனுக்கும் அவரது மனைவி சரண்யாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.இந்நிலையில், நேற்று முன்தினம் குடிபோதையில் வந்த ஜெகதீசனை, மனைவி கண்டித்ததால், மனமுடைந்த ஜெகதீசன், வீட்டில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தேவனாம்பட்டினம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.