ADDED : மார் 30, 2025 04:48 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : கடலுார், வண்டிப்பாளையம் சிங்கார வேலவர் கார்டன் அரிஸ்டோ பப்ளிக் பள்ளியில் இரண்டாம் ஆண்டு விழா நடந்தது.
பள்ளி மாணவ தலைவர் ஜெனேஷ் கார்த்திக் வரவேற்றார். தலைமையாசிரியை சங்கீதா ஆண்டறிக்கை வாசித்தார். சிறப்பு விருந்தினர் 'டிவி' தொகுப்பாளர் முத்துக்குமரன், மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கினார்.
கலைநிகழ்ச்சிகள் நடந்தது. பள்ளி நிறுவனர் சொக்கலிங்கம், தாளாளர் கஸ்துாரி, பள்ளி தலைவர் சிவக்குமார், தலைமை நிர்வாக அதிகாரி லட்சுமி, மக்கள் தொடர்பு அதிகாரி சிவராஜ் வாழ்த்திப் பேசினார்.
இலக்கிய மன்ற தலைவர் அமுதேஷ் நன்றி கூறினார்.