ADDED : ஏப் 07, 2025 05:52 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : கடலுார் அரிஸ்டோ பப்ளிக் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.
நடிகர் சதீஷ் முத்துகிருஷ்ணன் தலைமை தாங்கி, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பேசினார்.
பள்ளி முதல்வர் மதுரபிரசாத் பாண்டே, ஆண்டறிக்கை வாசித்தார்.
பள்ளி நிறுவனர் சொக்கலிங்கம், கஸ்துாரி சொக்கலிங்கம், பள்ளியின் தலைவர் சிவக்குமார், லட்சுமி சிவக்குமார், நிர்வாக அலுவலர் சிவராஜ் வாழ்த்திப் பேசினர்.
பள்ளி துணை முதல்வர், ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.