/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஆயுதப்படை போலீசார் சமத்துவ பொங்கல் விழா
/
ஆயுதப்படை போலீசார் சமத்துவ பொங்கல் விழா
ADDED : ஜன 12, 2025 06:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : கடலுார் ஆயுதப்படை போலீசார் சார்பில், சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
ஏ.டி.எஸ்.பி.,க்கள் கோடீஸ்வரன், நல்லதுரை ஆகியோர் விழாவை துவக்கி வைத்தனர். புதுப்பானையில் பொங்கல் வைத்து கொண்டாடப்பட்டது.
தொடர்ந்து கோலப்போட்டி, இசைநாற்காலி உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டது.
டி.எஸ்.பி.,சவுமியா, இன்ஸ்பெக்டர் அருட்செல்வம் மற்றும் சப் இன்ஸ்பெக்டர்கள், போலீசார் விழாவில் பங்கேற்று பொங்கல் விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர்.

