/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ராணுவத்தில் ஆட்கள் சேர்ப்பு விண்ணப்பங்கள் வரவேற்பு
/
ராணுவத்தில் ஆட்கள் சேர்ப்பு விண்ணப்பங்கள் வரவேற்பு
ராணுவத்தில் ஆட்கள் சேர்ப்பு விண்ணப்பங்கள் வரவேற்பு
ராணுவத்தில் ஆட்கள் சேர்ப்பு விண்ணப்பங்கள் வரவேற்பு
ADDED : மார் 04, 2024 12:37 AM
கடலுார் : இந்திய ராணுவத்தில் பொதுவான பணிகளுக்கு ஆட்கள் எடுக்கும் பணிக்கு இணைய தளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
கலெக்டர் அருண்தம்புராஜ் செய்திக்குறிப்பு;
அக்னிபாத் திட்டத்தின் கீழ் இந்திய ராணுவத்தில் பொதுப் பணி, தொழில்நுட்பம், வர்த்தகர், உதவியாளர்கள், ஸ்டோர் கீப்பர், செவிலியர் உதவியாளர், மருந்தாளுனர், மொழி ஆசிரியர்கள், பெண் காவலர்கள் போன்ற பணியிடங்களுக்கு பொது நுழைவு தேர்வுக்கான அறிவிப்பு www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
அக்னி வீரர் தேர்விற்கு கடலுார், சென்னை, வேலுார், திருப்பத்துார், ராணிபேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் புதுச்சேரி மாவட்டங்களைச் சேர்ந்த திருமணமாகாத ஆண், பெண் இருபலர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
ராணுவத்தில் சேர விருப்பம் உள்ள இளைஞர்கள் www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் வரும் 22ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு 22.04.2024 அன்று எழுத்து தேர்வு நடக்கிறது. இதன் அடிப்படையில் அக்னி வீரர்கள் தேர்வு செய்யப்படுவர்.
மேலும் விபரங்களுக்கு சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் அலுவலகத்தை 044 2567 4924 என்ற எண்ணில் தொடர்புக்கொள்ளலாம்.
இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.

