sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

இலவசமாக மரக்கன்றுகள் வழங்க ஏற்பாடு! மாவட்டத்தில் வனத்துறை தீவிரம்

/

இலவசமாக மரக்கன்றுகள் வழங்க ஏற்பாடு! மாவட்டத்தில் வனத்துறை தீவிரம்

இலவசமாக மரக்கன்றுகள் வழங்க ஏற்பாடு! மாவட்டத்தில் வனத்துறை தீவிரம்

இலவசமாக மரக்கன்றுகள் வழங்க ஏற்பாடு! மாவட்டத்தில் வனத்துறை தீவிரம்


ADDED : டிச 16, 2024 07:30 AM

Google News

ADDED : டிச 16, 2024 07:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்; கடலுார் மாவட்டத்தில் வனத்துறை சார்பில் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்குவதற்கு பல்வேறு வகையான மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு வழங்கும் பணி நடந்து வருகிறது.

தமிழகத்தில் வனம் மற்றும் மரங்களின் பரப்பளவை அதிகரித்து, புவி வெப்ப மயமாவதை தடுக்கும் வகையில், மரக்கன்றுகளை உற்பத்தி செய்து, விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க வனத்துறை ஏற்பாடு செய்துள்ளது.

இதற்காக, மாவட்டம் வாரியாக வனத்துறை சார்பில் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு, இலவசமாக வழங்கப்படுகிறது. அந்த வகையில், கடலுார் மாவட்டத்தில் இலவசமாக மரக்கன்றுகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடலுார் மாவட்டத்தில், கடலுார் சிதம்பரம், பிச்சாவரம், விருத்தாசலம், நெய்வேலி என, 5 வனச்சரகங்களும், கடலுார் புயல் தடுப்பு வனச்சரகம், நெய்வேலி வனவிரிவாக்க மையமும் உள்ளது.

நபார்டு மற்றும் தமிழ்நாடு காலநிலை மாற்றம் மற்றும் பசுமையாக்கல் திட்டத்தின் கடலுார் புயல் தடுப்பு வனச்சரகம் மூலமாக நடுவீரப்பட்டு அடுத்த மூலக்குப்பம் கிராமத்தில் வனத்துறை சார்பில், அமைக்கப்பட்டுள்ள நாற்றாங்காலில் தேக்கு, மகாகனி என 50,000 மரக்கன்றுகள் உற்பத்தி செய்யும் பணி நடந்தது.

இப்பணி முடிவடைந்த நிலையில், விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

மரக்கன்றுகள் பெற கடலுார் புயல் தடுப்பு வனச்சரகர் பாரதிதாசன்-9566729898, வனவர் ரவிக்குமார்- 9843012324, வனவர் வேல்முருகன்- 9787931858 ஆகியோரை அந்தந்த எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இதேப் போன்று, மாவட்டத்தில் பிச்சாவரம் வனச்சரகத்தை தவிர்த்து மற்ற வனச்சரகங்களிலும் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு, இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'மாவட்டம் முழுதும் அந்தந்த வனச்சரகங்கள் மூலமாக தேக்கு என பல்வேறு வகையான 2 லட்சத்து 50 ஆயிரம் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு, விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.

மரக்கன்றுகள் நடுவதற்கு ஆர்வம் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள வனச்சரகங்கங்கள் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்' என்றார்.






      Dinamalar
      Follow us