/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஆற்றுத்திருவிழா பாதுகாப்பு ஏற்பாடு ஆர்.டி.ஓ., அதிகாரிகளுடன் ஆலோசனை
/
ஆற்றுத்திருவிழா பாதுகாப்பு ஏற்பாடு ஆர்.டி.ஓ., அதிகாரிகளுடன் ஆலோசனை
ஆற்றுத்திருவிழா பாதுகாப்பு ஏற்பாடு ஆர்.டி.ஓ., அதிகாரிகளுடன் ஆலோசனை
ஆற்றுத்திருவிழா பாதுகாப்பு ஏற்பாடு ஆர்.டி.ஓ., அதிகாரிகளுடன் ஆலோசனை
ADDED : ஜன 18, 2025 02:09 AM

கடலுார: கடலுார் மற்றும் பண்ருட்டி பகுதிகளில் நடக்க உள்ள ஆற்றுத்திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கடலுார் ஆர்.டி.ஓ., தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
கடலுார் ஆர்.டி.ஓ.,அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு ஆர்.டி.ஓ.,அபிநயா தலைமை தாங்கினார். டி.எஸ்.பி.,க்கள் கடலுார் ரூபன்குமார், பண்ருட்டி ராஜா முன்னிலை வகித்தனர். கடலுார் கோட்டத்தில் கடலுார், பண்ருட்டி உட்பட தென்பெண்ணை ஆற்றின் கரையோரங்களில் ஆற்றுத்திருவிழா நடக்கும் 20இடங்களில் செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை நடந்தது.
திருவிழாவிற்கு பொதுமக்கள் செல்லும் வழிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்கவும், நீர் தேங்கியுள்ள பகுதிக்குள் பொதுமக்கள் செல்வதை தடுக்கும் வகையில் தடுப்புகள் அமைக்கவும், அசம்பாவிதங்கள் நடக்காமல் கண்காணிப்பதற்காக கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கவும், ஆற்றுத்திருவிழா நடக்கும் 20இடங்களில் மருத்துவமுகாம்கள் நடத்தவும், முக்கியமான 10இடங்களில் 108ஆம்புலன்ஸ் ஊர்தி தயார் நிலையில் வைத்திருக்கவும், குடிநீர், நடமாடும் கழிப்பிட வசதி ஏற்படுத்தித்தருவது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
பண்ருட்டி, நெல்லிக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், கடலுார் மாநகராட்சி நிர்வாகஅலுவலர், துணை மாவட்ட தீயணைப்பு அலுவலர், பண்ருட்டி நகராட்சி மேலாளர் மற்றும் வருவாய்த்துறை, ஒன்றிய அதிகாரிகள் பங்கேற்றனர்.