/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
என்.எல்.சி., அதிகாரிகள் சிறைபிடிப்பு கம்மாபுரம் அருகே பரபரப்பு
/
என்.எல்.சி., அதிகாரிகள் சிறைபிடிப்பு கம்மாபுரம் அருகே பரபரப்பு
என்.எல்.சி., அதிகாரிகள் சிறைபிடிப்பு கம்மாபுரம் அருகே பரபரப்பு
என்.எல்.சி., அதிகாரிகள் சிறைபிடிப்பு கம்மாபுரம் அருகே பரபரப்பு
ADDED : செப் 22, 2024 01:42 AM
விருத்தாசலம்: கம்மாபுரம் அருகே விரிவாக்கப் பணிக்கு இயந்திரங்களுடன் வந்த என்.எல்.சி., அதிகாரிகளை விவசாயிகள் சிறைபிடித்ததால் பரபரப்பு நிலவியது.
கம்மாபுரம் பகுதியில் என்.எல்.சி., சுரங்க விரிவாக்கப்பணிக்கு நிலம் கையகப்படுத்தப்பட்ட நிலையில், என்.எல்.சி.,க்கு நிலம், வீடு மற்றும் மனை வழங்கிய விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில், கூடுதல் இழப்பீடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடந்து வருகிறது.
இந்நிலையில், கம்மாபுரம் வடக்கு பகுதியில், என்.எல்.சி., அதிகாரிகள் ஐந்து பேர் அடங்கிய குழுவினர், நேற்று மாலை 6:45 மணியளவில், இரண்டு பொக்லைன் இயந்திரங்களுடன் விவசாய நிலங்களுக்குள் நுழைந்தனர். தகவலறிந்த அப்பகுதி விவசாயிகள் இருபதுக்கும் மேற்பட்டோர் சென்று, அதிகாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, திங்கட்கிழமை என்.எல்.சி., நில எடுப்பு அலுவலகத்தில் பேச்சு வார்த்தை நடக்கவுள்ள நிலையில், விவசாயிகளுக்கு தெரியாமல் இரவோடு இரவாக வேலையில் ஈடுபடுவது தவறு என வாக்குவாதம் செய்தனர்.
தகவலறிந்து சென்ற போலீசார், விவசாயிகளை சமாதானம் செய்தனர். அதையடுத்து, இயந்திரங்களுடன் என்.எல்.சி., அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.