ADDED : பிப் 01, 2024 06:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குள்ளஞ்சாவடி: கோயில் திருவிழாவில், விவசாயியை கத்தியால் வெட்டிய பள்ளி மாணவரை போலீசார் கைது செய்தனர்.
குள்ளஞ்சாவடி அடுத்த அணுக்கம்பட்டு மாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம் நேற்று முன்தினம் நடந்தது. அன்று இரவு நடந்த பாட்டு கச்சேரியில், சில இளைஞர்கள் குடிபோதையில் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டனர். இதை, அப்பகுதியை சேர்ந்த விவசாயி பழனிவேல், 55; தட்டிக்கேட்டார். அப்போது, 16 வயது பள்ளி மாணவர், கத்தியால் பழனிவேலை வெட்டினார். அதில் பழனிவேலின் கை துண்டானது. தடுக்க சென்ற பகவத், 26, என்பவருக்கும் வெட்டு விழுந்தது. காயமடைந்த இருவரும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து குள்ளஞ்சாவடி போலீசார் வழக்கு பதிந்து, மாணவரை கைது செய்தனர்.