/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சொத்து பிரச்னையில் தாய் தங்கைகளை தாக்கியவர் கைது
/
சொத்து பிரச்னையில் தாய் தங்கைகளை தாக்கியவர் கைது
ADDED : அக் 31, 2024 12:23 AM
புவனகிரி : புவனகிரியில் சொத்து பிரச்னையில் தாய் மற்றும் இரு தங்கைகளை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவரை, போலீசார் கைது செய்தனர்.
புவனகிரி கவரப்பாளையத்தெரு மகாலிங்கம் மனைவி சியாமளா,75; இவரின் மகன் கிருஷ்ணகுமார் புவனகிரியில் வசிக்கிறார். இளைய மகள் பரமேஸ்வரி காரைக்காலிலும், கடைசி மகள் கலைவாணியை சென்னையில் கணவருடன் வசிக்கின்றனர்.
சியமளா பெயரில் வீரமுடையான் நத்தம் கிராமத்தில் உள்ள 22 சென்ட் நிலத்தை விற்பனை செய்வதற்காக கடந்த 28 ம் தேதி தனது மகள்களை வீட்டிற்கு அழைத்துள்ளார். தகவலறிந்த கிருஷ்ணகுமார் தாய் மற்றும் இரு தங்கைகளை கட்டைக்கழியால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். காயமடைந்த மூவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சியமளா புகாரின் பேரில் புவனகிரி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் லெனின் மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து கிருஷ்ணகுமாரை கைது செய்தனர்.