/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுார், அரியலுாருக்கு 1,224 டன் யூரியா வருகை
/
கடலுார், அரியலுாருக்கு 1,224 டன் யூரியா வருகை
ADDED : ஜன 20, 2024 06:15 AM

விருத்தாசலம் : விருத்தாசலம் ரயில் நிலையத்திற்கு, நேற்று 1,224 டன் உரம் வந்திறங்கியது.
கடலுார், அரியலுார், விழுப்புரம், நாகப்பட்டினம், பெரம்பலுார் உள்ளிட்ட மாவட்டங்களில் சம்பா சாகுபடி அறுவடை பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இந்நிலையில், தாளடி, குறுவை சாகுபடி பணிகள் துவங்க உள்ளது. இதன் காரணமாக, சாகுபடிக்கு தேவையான யூரியாவை விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி வழங்க அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.
அந்த வகையில், கடலுார், அரியலுார் மாவட்ட விவசாயிகளுக்கு தேவையான யூரியா, சென்னை மணலி மெட்ராஸ் பெர்டிலைசர் லிமிடெட் நிறுவனத்தில் இருந்து விருத்தாசலம் ரயில் நிலையத்திற்கு சரக்கு ரயில் மூலம் 1,224 டன் யூரியா நேற்று வந்திறங்கியது.
இதில் 260 டன் யூரியா அரியலுார் மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. மீதம் உள்ள யூரியா கடலுார் மாவட்டத்தில் உள்ள தனியார் உரக் கடைகளுக்கு லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.