ADDED : மார் 02, 2024 11:16 PM
கடலுார்: அரசு கலை பண்பாட்டுத் துறை சார்பில் இளைஞர்களுக்கான கலைப் போட்டிகள் நடத்தப்படு கிறது.
கலெக்டர் அருண்தம்புராஜ் செய்திக் குறிப்பு;
தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறை சார்பில், கலைத் துறையில் சிறந்து விளங்கும் 17 முதல் 35 வயதுக்குட்பட்ட, இளைஞர்களை ஊக்கப்படுத்தும் வகையில், குரலிசை, கருவி இசை, பரதநாட்டியம், கிராமிய நடனம் மற்றும் ஓவியம் ஆகிய 5 பிரிவுகளில் மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள் கடலுார் இசைப் பள்ளியில் வரும் 9 மற்றும் 10ம் தேதி இரு நாட்கள் நடக்கிறது.
9ம் தேதி ஓவியம் மற்றும் கிராமிய நடனம் போட்டிகள் நடக்கிறது. 10ம் தேதி குரலிசை, கருவிகள் இசை, பரதநாட்டியம் போட்டிகள் நடக்கிறது.
அனைத்து போட்டிகளிலும் தனிநபர்கள் மட்டும் பங்கேற்க வேண்டும். ஓவியப்போட்டியில் பங்கேற்பவர்களுக்கு படம் வரைய பேப்பர் வழங்கப்படும்.
நடுவர்கள் கொடுக்கும் தலைப்பில் 3 மணி நேரத்திற்குள் ஓவியம் வரைய வேண்டும்.
போட்டிகளில் வெற்றிப் பெற்றவர்களுக்கு முதல் பரிசு 6,000 ரூபாய், இரண்டாம் பரிசு 4,500, மூன்றாம் பரிசு 3,500 ரூபாய் வழங்கப்படும். மாவட்ட அளவில் முதல் இடம் பெற்றவர்கள், மாநில அளவிலான போட்டியில் பங்கேற்பர்.
மேலும் விபரங்களுக்கு மாவட்ட அரசு இசைப் பள்ளியை 04142 232021 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.
