/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விருத்தாசலம் பள்ளியில் ரூ.7 லட்சத்தில் கலையரங்கம்
/
விருத்தாசலம் பள்ளியில் ரூ.7 லட்சத்தில் கலையரங்கம்
ADDED : மார் 01, 2024 12:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்,: விருத்தாசலம் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், ரூ.7 லட்சம் மதிப்பில் கலையரங்கம் கட்ட பூமிபூஜை போடப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் செல்வக்குமாரி தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு பூமி பூஜையை துவக்கி வைத்தார்.
இதில், காங்., கட்சி மாவட்ட பொருளாளர் ராஜன், நகர தலைவர் ரஞ்சித், வட்டார தலைவர் ராவணன், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் லெனின் குமார், செந்தமிழ் செல்வன் மற்றும் ஆசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

