ADDED : பிப் 04, 2025 12:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெண்ணாடம்; பெண்ணாடம் அடுத்த இறையூர் அருணா உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.
விழாவிற்கு, பள்ளி தலைவர் ஞானகணேசன் தலைமை தாங்கினார். பள்ளி செயலாளர் ஞானபிரகாசம்,  மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எல்லப்பன், விருத்தாசலம் கல்வி மாவட்ட அலுவலர் துரை பாண்டியன், பள்ளி பொருளாளர் திருஞானசம்பந்தம் முன்னிலை வகித்தனர். உதவி தலைமை ஆசிரியை கார்த்திகை வரவேற்றார்.
கோயம்புத்துார் அவிநாசிலிங்கம் மகளிர் பல்கலைக்கழக துணைவேந்தர் பாரதி ஹரிசங்கர் பேசினார். ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.  பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டி, சான்றிதழ் வழங்கப்பட்டது. தலைமை ஆசிரியர் கோபி நன்றி கூறினார்.

