/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அ.தி.மு.க., தலைமையில் சிறப்பான கூட்டணி அமையும் அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., நம்பிக்கை
/
அ.தி.மு.க., தலைமையில் சிறப்பான கூட்டணி அமையும் அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., நம்பிக்கை
அ.தி.மு.க., தலைமையில் சிறப்பான கூட்டணி அமையும் அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., நம்பிக்கை
அ.தி.மு.க., தலைமையில் சிறப்பான கூட்டணி அமையும் அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., நம்பிக்கை
ADDED : பிப் 16, 2025 05:47 AM

விருத்தாசலம்: 'இந்தியாவிலேயே சிறந்த முதல்வர் என ஸ்டாலின் நாடகம் போடுகிறார்' என அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., பேசினார்.
விருத்தாசலம் அடுத்த விஜயமாநகரத்தில், வடக்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
ஒன்றிய செயலாளர் வேல்முருகன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைச் செயலாளர் ரவிச்சந்திரன், மாநில பேரவை துணைச் செயலாளர் அருளழகன், வர்த்தக அணி துணைச் செயலாளர் சக்திவேல், ஜெ., பேரவை மாவட்ட செயலாளர் உமா மகேஸ்வரன் முன்னிலை வகித்தனர்.
மாணவரணி தேவபிரசாத் வரவேற்றார்.
ஒன்றிய தலைவர் கருணாகரன், துணைச் செயலாளர் வீரம்மாள், இணைச் செயலாளர் கீர்த்திகா, பொருளாளர் வெங்கடேசன், மாவட்ட பிரதிநிதி ஜெமினி ரவி உட்பட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., ஆலோசனை வழங்கி பேசுகையில், 'தி.மு.க., ஆட்சியில் குழந்தைகள் முதல் பாட்டி வரை பாலியல் தொந்தரவுக்கு ஆளாகி வருகின்றனர். ஸ்டாலின் ஆட்சியில் விலை உயர்வு, போதைப்பொருட்கள் புழக்கம், சட்டம் ஒழுங்கு சீர்கேடு குறித்து துணிச்சலாக சில ஊடகங்கள் மட்டுமே வெளிச்சத்திற்கு கொண்டு வருகின்றன. இந்தியாவிலேயே சிறந்த முதல்வர் என ஸ்டாலின் நாடகம் ஆடுகிறார்.
அ.தி.மு.க., தலைமையில் சிறப்பான கூட்டணி அமைந்து, 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும்.
அதற்குரிய திட்டத்தை பழனிசாமி வகுத்து வருகிறார். எனவே, ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும் அ.தி.மு.க.,வுக்கு கூடுதலாக ஓட்டுகள் பெற்றுத்தர அனைவரும் ஒருங்கிணைந்து பணிபுரிய வேண்டும்' என்றார்.

